காவிரிப் பிரச்சனை- லோக்சபாவில் தமிழக, கர்நாடக எம்.பிக்கள் கடும் மோதல்

இன்று காலை நாடாளுமன்றம் கூடியவுடன் இரு அவைகளிலும் சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் துவக்கக் கோரி திமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர். அதேசமயம், ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கக் கோரி அதிமுகவினர் அமளியில் குதித்தனர். இதனால் இரு அவைகளும் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பிற்பகல் 2 மணிக்கு மக்களவை கூடியது.
அவை கூடியதும் காவிரிப் பிரச்சனையை கர்நாடக எம்.பிக்கள் கிளப்பினர். கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. அனந்தக்குமார் எழுந்து, காவிரியில் தமிழகம் தேவைக்கு அதிகமாக தண்ணீர் கேட்பதாக கூறி பேசினார். இதற்கு தமிழக எம்.பிக்கள் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தனர். பதிலுக்கு கர்நாடகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் குரல் கொடுத்தனர்.
இதையடுத்து இரு மாநில எம்.பிக்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவையில் பெரும் அமளி நிலவியது. அலுவல் எதையும் தொடர முடியவில்லை. இதையடுத்து அவையை இன்று நாள் முழுவதும் ஒத்திவைத்து உத்தரவிட்டார் சபாநாயகர் மீரா குமார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications