மன்னார்குடி கேங்கினால் கும்பகோணம் சகாய நிதி நிறுவனத்துக்கும் சோதனை!
கும்பகோணம்: கும்பகோணத்தை தலைமையகமாக கொண்டு 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனமும் "மன்னார்குடி" புயலின் தாக்குதலை எதிர்கொண்டிருக்கிறது.
கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனமானது அரசியல் தலையீடு இல்லாமல் தொடங்கப்பட்டது. இன்றைய அதன் மதிப்பு ஆயிரம் கோடிக்கும் அதிகமானது!
ஆட்சி மாறும்போதெல்லாம் இந்த நிதி நிறுவன காட்சிகளும் மாறிவிடும்! எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்த கட்சி பிரமுகர்களின் பிடியில் சகாய நிதி நிறுவனம் சிக்கிக் கொள்ளும்!
நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு கை நிறைய பல ஆயிரக்கணக்கில் சம்பளம்!. மொத்தம் உள்ள 92 கிளைகளில் யாருக்காவது லோன் கொடுத்து அதை வாராக் கடன் என்று தள்ளுபடி செய்து அதில் கொள்ளை லாபம்! என்று அரசியல்வாதிகளுக்கு ஒரே கொண்டாட்டம்தான்!.
இப்போது அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவசரமாக தேர்தல் நடத்தி தி.மு.க.வினரை கழட்டிவிட்டு அதிமுகவினரையே இதன் முக்கிய பதவிகளில் நியமித்துக் கொண்டனர். அதிமுகவின் முன்னாள் நகரச் செயலாளரும் ரதிமீனா டிராவல்ஸ் அதிபருமான எஸ்.பி.சேகரை தலைவராக்கிவிட்டனர். எஸ்.பி.சேகர் யார்? மன்னார்குடி திவாகரன் கேங்.. எல்லாம் கொஞ்சகாலம் சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது...
போயஸ் கார்டனில் வீசிய புயல் கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனத்தையும் ஒரு பதம் பார்த்திருக்கிறது. கார்டனிலிருந்து பலரும் விரட்டியடிக்கப்பட்டு சிறைக்கு தள்ளப்பட்ட நிலையில் கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவன தலைவர் சேகர் மற்றும் இயக்குநர்கள் பலரும் கட்டாயமாக ராஜினாமா செய்ய வைக்கப்பட்டிருக்கின்றனர்!. எல்லாம் காவல்துறையின் "பல"ப்பிரயேகத்தால் நிகழ்ந்திருக்கிறது!
அனேகமாக கும்பகோணம் நிதிநிறுவன சேர்மனாக தலைவர் பதவி வகித்த சேகர், மன்னார்குடி சாகவாசத்தால் ஏதோ ஒரு வழக்கில் "உள்ளே" போவதற்கும் வாய்ப்பிருக்கிறதாம்!












Click it and Unblock the Notifications