வாக்களித்த 4வது நாளே சங்கரன்கோவில்- சென்னை இடையே சொகுசு பேருந்துவிட்ட ஜெயலலிதா

கடந்த 4ம் தேதி சட்டசபையில் பேசிய சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. முத்துசெல்வி சங்கரன்கோவிலில் இருந்து சென்னைக்கு நேரடி பேருந்து விடப்படுமா என்று கேட்டார். அதற்கு பதிலளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார். ஆனால் அப்போது எழுந்த முதல்வர் முத்துசெல்வியின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், விரைவில் பேருந்து விடப்படும் என்றும் தெரிவித்தார்.
அவர் அவ்வாறு அறிவித்த 4வது நாளே சங்கரன்கோவிலில் இருந்து சென்னைக்கு நேரடி சொகுசு விரைவு பேருந்து(அல்ட்ரா டீலக்ஸ்) விடப்பட்டுள்ளது. இந்த பேருந்து தொடக்க விழா நேற்று சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் நடந்தது. அதில் கோட்டாட்சியர் இளங்கோ, போக்குவரத்து மேலாண்மை இயக்குநர் மோகன், நகராட்சித் தலைவர் (பொறுப்பு) கே. கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.
இதையடுத்து கதர் மற்றும் கிராமத் தொழில் துறை அமைச்சர் பி. செந்தூர்பாண்டியன், முத்துசெல்வி எம்.எல்.ஏ. ஆகியோர் சங்கரன்கோவில்- சென்னை சொகுசு பேருந்தை கொடியசைத்து தொடக்கி வைத்தனர். இந்த பேருந்து தினமும் மாலை 6.30 மணிக்கு சங்கரன்கோவிலில் இருந்து புறப்பட்டு ராஜபாளையம், மதுரை, திருச்சி, விழுப்புரம், திண்டிவனம் வழியாக மறுநாள் காலை 6.30 மணிக்கு சென்னை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் தினமும் இரவு 7 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு சங்கரன்கோவில் வந்தடையும். இந்த பேருந்தில் பயணம் செய்ய பயணிகளிடம் ரூ.405 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications