ராமஜெயம் கொலைக்குப் பின் தலைமறைவான காதல் ஜோடிக்கு போலீஸ் வலை வீச்சு

கடந்த மார்ச் 29-ந் தேதியன்று ராமஜெயம் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை எந்தத் துப்புமே போலீசாருக்குக் கிடைக்கவில்லை. தூத்துக்குடி கவுன்சிலர் சாந்தி உட்பட பலரிடம் போலீசார் விசாரணை நடத்திப் பார்த்துவிட்டனர். இன்னமும் குற்றவாளிகள் யார் என்று தெரியவில்லை.
இந்த நிலையில் ராமஜெயத்தின் செல்போன் எண்களுக்கு கடந்த பல மாதங்களாக வந்த தொலைபேசி அழைப்புகள், ராமஜெயம் பேசிய தொலைபேசி எண்களை போலீசார் ஆராய்ந்தனர். இதில் சாத்தான்குளம் காதல் ஜோடியினரிடம் அதிகமாக ராமஜெயம் பேசியது தெரியவந்துள்ளது. கடந்த ஓராண்டாக இந்த காதல்ஜோடியிடம் ராமஜெயம் பேசிவந்திருக்கிறார்.
மேலும் திருச்சியில் தங்கியிருந்த காதல் ஜோடி, ராமஜெயம் படுகொலை செய்யப்பட்ட 48 மணிநேரத்தில் திருச்சியைவிட்டு எஸ்கேப்பாகிவிட்டது. இப்போது காதல்ஜோடி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. இதனால் அவர்களது சொந்த ஊரான சாத்தான்குளத்தில் முகாமிட்டுள்ள திருச்சி போலீசார் அந்த ஜோடியின் உறவினர்களிடம் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.
மேலும் திருச்சியை சேர்ந்த கூலிப்படை தலைவன் சாமி ரவி, காதர் மொய்தீன், மோகன், அய்யாசாமி ஆகியோரை தூக்கி வந்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications