பிறந்து 2 நாளேயான பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்ற தந்தை கைது
போபால்: மத்திய பிரதேசத்தில் பிறந்து 2 நாட்களேயான பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள முராரைச் சேர்ந்தவர் நரேந்திர ராணா(40). அவரது மனைவி அனிதா. அவருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி முராரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று நினைத்திருந்த ராணாவுக்கு இது பெரும் ஏமாற்றமாக இருந்தது.
இதனால் ஆத்திரமடைந்த அவர் குழந்தை பிறந்து 2 நாட்கள் ஆன பிறகு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு குழந்தைக்கு நிகோட்டின் என்னும் விஷத்தைக் கொடுத்தார். இதில் குழந்தை பரிதாபமாக பலியானது. குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை கடந்த மாதம் தான் போலீசாருக்கு கிடைத்தது. அறிக்கையில் குழந்தைக்கு நிகோட்டின் என்னும் விஷம் கொடுக்கப்பட்டதால் அது இறந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே குழந்தை இறந்த அன்று அது வைக்கப்பட்டிருந்த வார்டில் ராணாவைப் பார்த்துள்ளனர். இதையடுத்து போலீசார் நேற்று ராணைவை கைது செய்து விசாரித்தபோது தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
ஆண் குழந்தை வேண்டும் என்று நினைத்த ராணா பெண் குழந்தை பிறந்ததால் வருத்தத்தில் இருந்ததாக அவர் மனைவி அனிதா தெரிவித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications