பன்றிக் காய்ச்சலுக்கு கமுக்கமாக சிகிச்சையளித்த மருத்துவமனைக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ்
சென்னை: பன்றிக் காய்ச்சல் தாக்கியவருக்கு சிகிச்சை அளித்தும் அது குறித்து மாநகராட்சி சுகாதாரத்துறைக்கு தெரிவிக்காத அடையாறு மேனங்குடி மருத்துவமனைக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. முதன் முதலாக சென்னையில் தான் பன்றிக் காய்ச்சல் பரவியது. வெளிமாநிலங்களுக்கு சென்று வந்த 3 பேரால் தமிழகத்திற்குள் மீண்டும் பன்றிக் காய்ச்சல் வந்துள்ளது. பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் யாராவது வந்தால் உடனே அது குறித்து மாநகராட்சி சுகாதாரத் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் கடந்த 3 மாத காலத்தில் 17 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தற்போது 5 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் வீடுகளில் இருந்தே சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், நண்பர்கள், அவர்கள் பணிபுரியும் இடங்கள், குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் மாநகராட்சி மருத்துவக் குழு பரிசோதனை நடத்தி வருகிறது.
ராயப்பேட்டை சி.எஸ்.ஐ. மோசைன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. மோசைன் மெட்ரிக்குலேஷன் பள்ளி, அடையாறு சங்கரா மேல்நிலைப்பள்ளி, அண்ணா நகர் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி, தியாகராயநகர் வேளாங்கண்ணி பள்ளி ஆகிய பள்ளிகளில் படிக்கும் சுமார் 3,100 மாணவ-மாணவியருக்கு இன்று பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் வசிக்கும் தேனாம்பேட்டை முதலியான்டன் தோட்டத்தில் 11 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. தொடர் இருமல், காய்ச்சல் இருந்தவர்களின் சளி மாதிரி பரிசோதனைக்காக கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அடையாறு மேனங்குடி மருத்துவமனையில் ஒருவர் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் அந்த மருத்துவமனை இது குறித்து மாநகராட்சிக்கு தகவல் கொடுக்கவில்லை. இதனால் மாநகராட்சி சுகாதாரத் துறை அந்த மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications