கரூரில் ஜெயலலிதாவின் பேனர் கிழிப்பு: போலீசில் கொமுக புகார்!

இந்திய விடுதலைப்போரில் எண்ணற்ற தியாகச்சீலர்கள் கிளர்ந்து எழுந்து தங்கள் வாழ்வை துச்சமென மதித்து பாரதத்தின் அடிமைத் தளையை தகர்த்தெறிய அரும்பாடு பட்டனர். சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஆர்ப்பரித்து, ஆங்கிலேய ஆதிக்கத்தை தடுத்தவர் தீரன் சின்னமலை.
தீரன் சின்னமலையை போரின் மூலம் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி மூலம் அவரை கைது செய்து சங்ககிரி கோட்டைக்கு அழைத்துச் சென்று தூக்கிலிட்டனர்.
அவர் தூக்கிலிடப்பட்ட சங்ககிரியில் அவருக்கு நினைவுச்சின்னம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு அரசியல் கட்சிகளும், கொங்கு அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தன. இந்த நிலையில் தமிழக சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி பழனிசாமியும் (மார்ச் 30, 2012) இதே கோரிக்கையை முன்வைத்தார்.
அப்போது, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில்( ஏப்ரல் 04 , 2012) அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில், தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட இடமான சங்ககிரியில் அவருக்கு நினைவுச்சின்னம் விரைவில் அமைக்கப்படும் என அறிவித்தார்.
இதனையடுத்து முதல்வர் ஜெயலலிதாவின் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து கொங்கு நாடு முன்னேற்றக் கழக மாநில பொதுச் செயலாளர் இஞ்ஜினியர் ஈஸ்வரன் அறிக்கை வெளியிட்டார்.
இதே சூட்டோடு, முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து கரூர் பேருந்து நிலையம் அருகில் கொமுக சார்பில் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டது. காலையில் வைத்த பேனரை மாலையில் மர்ம நபர்கள் சிலர் கிழித்துப் போட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த கொங்கு நாடு முன்னேற்றக் கழக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். டிஜிட்டனல் பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரூர் காவல் நிலையம், எஸ்.பி. அலுவலகம், திருச்சி டி.ஐ.ஜி. அலுவலகம் ஆகியவற்றில் கரூர் மாவட்டச் செயலாளர் விசா.சண்முகம் புகார் அளித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications