நெல்லை அனல்மின் நிலையத்தை எதிர்த்து வழக்கு: மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு நோட்டீஸ்
மதுரை: இந்திய சிமெண்ட்ஸ் நிறுவனம் தனது மின் தேவைக்காக துவங்கவிருக்கும் அனல்மின் நிலையத்திற்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி சங்கர்நகரைச் சேர்ந்த ஜேசு என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
மத்திய, மாநில அரசுகளின் கொள்கைப்படி மக்கள் வசிக்கும் பகுதியில் அனல்மின் நிலையங்கள் அமைக்கக் கூடாது. ஆனால் திருநெல்வேலி மாவட்டம் நாரணம்மாள்புரத்தில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் அனல்மின் நிலையம் அமைக்க முயற்சி நடைபெற்று வருகின்றது.
இதிலிருந்து வெளியேறும் கழிவு நீர் நிலத்தடி நீரை பாதிக்கும். உலர் சாம்பல், ஆக்சிஜனில் கலக்கும். மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு, ஆஸ்துமா உட்பட பல்வேறு சுவாச பாதிப்புகள் ஏற்படும். மேலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். இது பற்றிய பொது விசாரணை, மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தபோது இந்த பகுதி மக்கள் அனல்மின் நிலையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
ஆனால் தற்போது அனல்மின் நிலைய திட்டப் பணி துவங்கிய நிலையிலேயே பயங்கர சத்தம் மற்றும் தூசி எழுகிறது. எனவே, அனல்மின் நிலையம் இயங்க தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.பானுமதி, பி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரபுப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை வரும் 25ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications