மீண்டும் பயணிகள் விமான நிறுவனம் துவங்கும் 'ஏர் டெக்கன்' கோபிநாத்!

இவரது ஏர் டெக்கன் நிறுவனத்தை வாங்கிய கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையா அதை Kingfisher Red என்று பெயர் மாற்றி கட்டணத்தை உயர்த்தினார். ஆனால், தனது கிங்பிஷர் நிறுவனத்தையே சரியாக நடத்தத் தெரியாத அவர், கோபிநாத்திடம் வாங்கிய நிறுவனத்தை ஊத்தி மூடினார்.
இதையடுத்து டெக்கன் 360 என்ற சரக்குப் போக்குவரத்து விமான நிறுவனத்தைத் துவக்கினார் கோபிநாத். இது பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனால் இவருக்கு ரூ. 500 கோடி வரை கடன் ஏற்பட்டது.
இந் நிலையில் மல்லையாவுடன் இவர் செய்து கொண்ட புதிய பயணிகள் விமான நிறுவனத்தைத் துவக்க மாட்டேன் என்ற ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதியுடன் காலாவதியாகிறது.
இதைத் தொடர்ந்து மீண்டும் பயணிகள் சேவை விமான நிறுவனத்தைத் துவக்க கேப்டன் கோபிநாத் திட்டமிட்டுள்ளார். இதற்கான அனுமதியை சமீபத்தில் மத்திய விமானத்துறையிடம் இவர் வாங்கியுள்ளார்.
முதல்கட்டமாக இந்தியாவுக்குள் பெங்களூர்ஸ மதுரை, கோவை, மும்பை, டெல்லி, குவஹாத்தி, கோவா உள்ளிட்ட 21 இடங்களில் விமானங்களை இயக்க இவருக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
இதற்காக ஏர் பஸ் 320 மற்றும் ஏடிஆர் 72 ரக விமானங்களை கோபிநாத் லீசுக்கு எடுக்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications