வழிதவறி வேதாரண்யம் வந்த 2 இலங்கை மீனவர்கள் விடுதலை
வேதாரண்யம்: வழிதவறி வேதாரண்யம் வந்த இலங்கை மீனவர்கள் இருவர் விடுதலை செய்யப்பட்டனர்.
இலங்கை பரிசுத்துறை சுப்பர்மடம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தயாளன் (18), சிவாஜிபிரபு (22). அந்தச இரண்டு பேரும் அவர்களுக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த மாதம் 30ம் தேதி மீன் பிடிக்க கடலுக்கு புறப்பட்டனர். காற்று பலமாக வீசியதால் படகு திசை மாறிச் சென்றது. இதற்கிடையே டீசல் முற்றிலும் தீர்ந்து போனது.
இதனையடுத்து காற்றின் திசையில் சென்ற அவர்களின் படகு நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையை அடைந்தது.
படகில் மீன்பிடி வலையும், கொஞ்சம் மீன்களும் இருந்தது. மீனவர் அடையாள அட்டை, லைசென்ஸ் உள்ளிட்ட எந்த ஒரு ஆவணமும் அவர்களிடம் இல்லை. இதையடுத்து கடலோர காவல்படையினர் மற்றும் வேதாரண்யம் போலீசார் படகை பறிமுதல் செய்ததுடன், அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பின்பு அவர்கள் உண்மையிலேயே வழிதவறி வந்தார்களா என்பது குறித்து கடற்படை, கடலோர காவல்படை, உளவுத்துறை போலீசார், உள்ளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் வழி தவறி வந்தது உறுதியானது.
இதையடுத்து இலங்கை மீனவர்கள் இரண்டு பேரும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை இந்திய கடற்படையினர் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications