போபர்ஸ் ஊழல்: சோனியாவை விசாரிக்க விடாமல் தடுத்தார் வாஜ்பாய்: சு.சாமி மறைமுக தகவல்

கடந்த 25 வருடங்களாக உலவிக் கொண்டிருந்த, சமீ்பத்தில் சற்றே அடங்கிப் போயிருந்த போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் விவகாரம் தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த முன்னாள் காவல்துறை தலைவரும், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியுமான ஸ்டென் லின்ட்ஸ்டிரோம் வெளியிட்டுள்ள தகவல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜீவ் காந்திக்கு இதில் நேரடித் தொடர்பு இல்லை. இந்த வழக்கில் வேண்டும் என்றே அமிதாப் பச்சன் பெயரை இந்திய புலனாய்வு விசாரணை அமைப்புகள் சேர்த்தன என்று அவர் கூறியுள்ளார். மேலும் பல தகவல்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அதில் முக்கியமானதாக பீரங்கி பேர ஊழலில் முக்கியப் புள்ளியான இத்தாலியைச் சேர்ந்த புரோக்கரான குவாத்ரோச்சியைக் காப்பாற்ற ராஜீவ் காந்தி மிகக் கடுமையாக முயன்றார். இந்தியாவுக்கு உள்ளேயும், வெளியேயும் அவர் தீவிரமாக முயன்றார் என்று கூறியுள்ளார் லின்ட்ஸ்டிரோம்.
இந்த நிலையில் சுப்பிரமணியம் சாமி இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில்,
பாஜக கூட்டணி ஆட்சியில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது போபர்ஸ் விவகாரம் தொடர்பாக குவாத்ரோச்சிக்கும், சோனியாவுக்கும் உள்ள தொடர்பு பற்றியும், அது குறித்து சோனியாவை விசாரிக்க அனுமதிக்க கோரியும், சுவீடன் போலீஸ் துறைத் தலைவராக இருந்த ஸ்டென் லின்ட்ஸ்டிரோம், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதற்கு அப்போதைய மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டது. (போபர்ஸ் தொடர்பான ஆவணங்களைத் தொடக் கூடாது என தன்னிடம் வாஜ்பாய் கூறியதாக 2007ம் ஆண்டு ஜார்ஜ் பெர்ணான்டஸ் பேட்டி அளித்தது நினைவுகூறத்தக்கது).
லின்ட்ஸ்டிரோம் எழுதிய கடிதம் மற்றும் 150 பக்க ஆவணங்களையும் சி.பி.ஐ.க்கு அனுப்பியிருந்தேன். ஆனால், போபர்ஸ் ஊழல் குறித்து விசாரணை நடத்திய சி.பி.ஐ., குவாத்ரோச்சியிடம் விசாரணை நடத்த எவ்வளவோ முயன்றோம்; ஆனால் முடியவில்லை. எனவே, வழக்கை முடித்துக் கொள்வதாகக் கூறி வழக்கை மூடி மறைத்துவிட்டது.
ஆனால் லின்ட்ஸ்டிரோம் வெளிப்படுத்திய உண்மையை ஆதாரமாக வைத்து, சோனியாவிடம் விசாரணை நடத்தக் கோரி நான் மீண்டும் நீதிமன்றத்தை அணுக உள்ளேன். முதலில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகார வழக்கை முடித்துவிட்டு இந்த விஷயத்தை கையில் எடுப்பேன் என்று கூறியுள்ளார் சாமி.
பாஜகவுடன் நெருக்கமாக இருந்தாலும் சு.சாமியை வாஜ்பாய் எப்போதுமே கொஞ்ச தூரத்திலேயே வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications