டாக்டர், படிக்க யு.எஸ். போறீங்களா, படிச்சுட்டு உடனே திரும்பிடனும் சரியா?
டெல்லி: இந்த ஆண்டு முதல் மேல்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் மருத்துவர்கள் படிப்பை முடித்துக் கொண்டு நாடு திரும்புவோம் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவி்த்துள்ளார். படிக்கப் போகிறேன் என்ற பெயரில் மருத்துவர்கள் அமெரிக்காவில் செட்டிலாவதை தடுக்கத் தான் இப்படி ஒரு நடவடிக்கை.
இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மேல்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் எந்த மருத்துவரும், படிப்பு முடிந்தவுடன் நாட்டுக்கு திரும்பிவிடுவோம் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டு தான் செல்ல வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் மேல்படிப்புக்காக வெளிநாட்டுக்கு சென்ற 3,000 மருத்துவர்கள் நாடு திரும்பவில்லை. அவ்வாறு படிப்பை முடித்து நாடு திரும்பாவதவர்களுக்கு இந்தியாவில் தொழில் செய்ய அனுமதி அளிக்கப்பட மாட்டாது.
இந்த ஆண்டு முதல் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் படிக்க விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களிடம் அரசிடம் இருந்து என்.ஓ.சி. சான்றிதழ் கேட்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. வேறு எந்த நாடும் என்.ஓ.சி. சான்றிதழ் கேட்பதில்லை. ஒப்பந்தத்தை மீறினால் அவர்களை அமெரிக்காவில் தொழில் செய்ய அனுமதி மறுக்குமாறு அந்நாட்டு அரசுக்கு எங்களால் கடிதம் எழுத முடியும்.
எம்.பி.பி.எஸ். படிப்பு காலத்தை 5.5 ஆண்டுகளில் இருந்து 6.5 ஆண்டுகளாக அதிகரிப்பதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. இது குறித்து மருத்துவக் கழகம் ஆய்வு செய்து வருகிறது என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications