திருவண்ணாமலை: நள்ளிரவில் நித்யானந்தாவுக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்த மதுரை ஆதீனம்!

Subscribe to Oneindia Tamil

Nithyanantha
திருவண்ணாமலை: பெங்களூரில் வைத்து நித்தியானந்தாவுக்கு ஒருமுறை பட்டாபிஷேகம் செய்த மதுரை ஆதீனம் நேற்று இரவு திருவண்ணாமலையில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் வைத்து அவருக்கு மீண்டும் பட்டாபிஷேகம் செய்தார். இதில் நித்தியானந்தாவின் பெண் சீடர்கள், ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டு வந்து கலந்து கொண்டனர்.

சமீபத்தில் பெங்களூர் சென்ற மதுரை ஆதீனம் அங்கு வைத்து நித்தியானந்தாவை அடுத்த மதுரை ஆதீனமாக அறிவித்தார். மேலும் அவருக்குத் தங்க கிரீடம், செங்கோல் ஆகியவற்றைக் கொடுத்தார். மேலும் சட்டப் பூர்வமாக இனிமேல் நித்தியானந்தாதன் எல்லாம் என்றும் வாசித்து அறிவித்தார்.

இந்த நிலையில் நேற்று நித்தியானந்தாவுக்கு திருவண்ணாமலையில் உள்ள அவரது ஆசிரமத்தில் வைத்து பட்டாபிஷேகம் நடத்தினார் மதுரை ஆதீனம். மலர் கிரீடம் சூட்டி, அரியணையில் அமர வைத்து பட்டாபிஷேகம் செய்தார். அபபோது வழக்கம் போல நித்தியானந்தாவின் ஆண், பெண் சீடர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பி வழக்கம் போல நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

முன்னதாக இதை மதுரையில் நடத்துவதாக இருந்தார் மதுரை ஆதீனம். ஆனால் தற்போது அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் திருவண்ணாமலையில் நடத்தி முடித்துள்ளார்.

நேற்று மதுரை ஆதீனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். இதனைல் மதுரையில் பரபரப்பு நிலவியது. இந்த ரெய்டைத் தொடர்ந்து மதுரை ஆதீனம் திருவண்ணாமலைக்குப் புறப்பட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+