மனித வெடிகுண்டு மிரட்டல்: ஏர்போர்ட்டுகளில் பாதுகாப்பு அதிகரிப்பு
டெல்லி: விமான நிலையங்களில் தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தலாம் என்று அஞசப்படுவதால் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையங்களில் தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தலாம் என்று சிவில் விமான போக்குவரத்து பணியகம் அனைத்து விமான நிலையங்களையும் எச்சரித்துள்ளது. இதையடுத்து நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு படை மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
வாகனங்கள் நிறுத்தும் இடம், விமானங்கள் நிற்கும் இடம், பயணிகளின் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் தீவிரமாக சோதிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இதே போன்று விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் இருப்பதாக சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் எச்சரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அல் கொய்தா தீவிரவாதிகள் ஆபரேஷன் மூலம் வயிற்றுக்குள் வெடிகுண்டுகளை வைத்து அமெரிக்க விமானங்களை தகர்க்க திட்டமிட்டுள்ளதையடுத்து அமெரிக்காவில் உள்ள விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications