For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எதியூரப்பாவின் முன்னாள் 'குடைச்சல்' ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன்!

Google Oneindia Tamil News

Janarthana Reddy
ஹைதராபாத்: சுரங்க ஊழலில் சிக்கி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும், முன்னாள் முதல்வர் எதியூரப்பாவின் அரசியல் வாழ்க்கை ஆட்டம் காண அஸ்திவாரம் போட்டவருமான கலி ஜனார்த்தன ரெட்டிக்கு ஹைதராபாத் சிபிஐ கோர்ட் இன்று ஜாமீன் வழங்கியது.

ரெட்டியின் ஓபுளாபுரம் சுரங்க நிறுவனத்தின் முறைகேடுகள் தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி பெல்லாரியில் வைத்துக் கைது செய்யப்பட்டார் ரெட்டி. இவருடன் மைத்துனரும், ஓபுளாபுரம் நிறுவனத்தினஅ நிர்வாக இயக்குநருமான ஸ்ரீனிவாச ரெட்டியும் சேர்த்து சிபிஐயால் தூக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே சிபிஐ அதிகாரிகள் 186 பக்க குற்றப்பத்திரிக்கையாத் தாக்கல்செய்துள்ளனர். இதில் ஜனார்த்தன ரெட்டி, ஸ்ரீனிவாச ரெட்டி, அனந்தப்பூர் மாவட்ட சுரங்கம் மற்றும் மண்ணியல் துறை இயக்குநர் ராஜகோபால், உதவி இயக்குநர் லிங்கா ரெட்டி ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் லிங்கா ரெட்டி தற்போது இறந்து வி்ட்டார்.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜனார்த்தன ரெட்டி ஜாமீன் கோரி மனு செய்தார். அதை ஏற்ற சிபிஐ கோர்ட் ரெட்டிக்கு இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

English summary
Former Karnataka minister Gali Janardhana Reddy was today granted conditional bail by a CBI court in the illegal mining case involving Obulapuram Mining Company (OMC). Reddy along with OMC's Managing Director and his brother-in-law BV Srinivas Reddy had been under judicial remand ever since their arrest from Bellary on September 5 last year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X