ஏர் இந்தியா விமானிகளின் போராட்டத்துக்கு சர்வதேச விமானிகள் கூட்டமைப்பும் ஆதரவு

ட்ரீம்லைனர் விமானத்தை இயக்க பயிற்சி அளிக்கும் விவகாரத்தில் ஏர் இந்தியா நிர்வாகத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விமானிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். இப்போராட்டம் 13-வது நாளாக நீடிக்கிறது.
இந்நிலையில் சர்வதேச விமானிகளின் கூட்டமைப்பானது அதில் உறுப்பினர்களாக இருக்கும் சங்கங்களுக்கு அனுப்பிய கடிதம் ஒன்றில் ஏர் இந்தியா நிர்வாகத்துக்கு ஒத்துழைக்காமல் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
சர்வதேச விமானிகளின் கூட்டமைப்பின் இந்த அதிரடியால் ஏர் இந்தியாவுக்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய விமானிகள் சங்கத்தின் செயலாளர் அனில் ராவ், உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் எங்களுக்கு ஆதரவு இருக்கிறது. இனியாவது ஏர் இந்தியா நிர்வாகம் புரிந்து கொண்டு பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications