பெங்களூரில் கொள்ளை: சென்னை பெண் வழக்கறிஞர் கைது-1.5 கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளி பறிமுதல்
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய சென்னையச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் பி. வருணஸ்ரீ(30). வழக்கறிஞர். அவர் கர்நாடக மாநிலம் தும்கூரைச் சேர்ந்த மஞ்சுநாதா(எ) டக் மஞ்சா(எ) ராமகிருஷ்ணா(30), பசவேஸ்வராநகரைச் சேர்ந்த ரவி ஜார்ஜ்(எ) செபாஸ்டியன் டாயஸ்(32) மற்றும் கமலாநகரைச் சேர்ந்த எஸ். கிருஷ்ணமாச்சாரி(எ) ராமாச்சாரி(31) ஆகியோரை பெங்களூரில் உள்ள வீடுகளில் கொள்ளையைடிக்க வைத்துள்ளார். இதில் மஞ்சுநாதா மூது கொள்ளை, வழிப்பறி உள்பட 37 வழக்குகள் உள்ளன.
அந்த 3 பேரும் வருணஸ்ரீயின் ஐடியாபடி அவரது உறவினரான தேஜஸ்வியின் ஹனுமந்தநகர் வீட்டில் கொள்ளையடித்துள்ளனர். தேஜஸ்வி தனது குடும்பத்துடன் வெளிநாடு சென்றுள்ளார். அந்த நேரம் வருணஸ்ரீ பெங்களூர் பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் 7 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வந்த மஞ்சுநாதாவை தொடர்பு கொண்டு தேஜஸ்வியின் வீட்டில் கொள்ளையடிக்க ஐடியா கொடுத்துள்ளார். அவரே மஞ்சுநாதாவை ஜாமீனில் வெளியே கொண்டு வந்துள்ளார். பிறகு அவரை சென்னைக்கு அழைத்துச் சென்று, புதிய செல்போன், சிம் கார்டு வாங்கிக் கொடுத்துள்ளார் வருணஸ்ரீ.
அவரது ஐடியாபடி அந்த 3 பேரும் தேஜஸ்வியின் வீட்டில் கொள்ளையடித்துவிட்டு திருட்டுப் பொருட்களுடன் சென்னை வந்துள்ளனர். வருணஸ்ரீயிடம் பணத்தை கொடுத்துவிட்டு கொள்ளைப் பொருட்களில் சிறிதளவை தாங்கள் எடுத்துக் கொண்டனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொள்ளை தொடர்பாக போலீசார் வருணஸ்ரீ, மஞ்சுநாத், ரவி மற்றும் ராமாச்சாரி ஆகியோரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.57 லட்சம் மதிப்புள்ள 1.5கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளி நகைகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications