2ஜி விவகாரத்தில் ப.சிதம்பரத்துக்கு தொடர்பில்லை என நம்புவது வெறும் 10% மக்களே!

ABP நியூஸ் மற்றும் சர்வதேச சர்வே நிறுவனமான ஏ.சி.நீல்சன் ஆகியவை இணைந்து நாட்டில் 28 நகர்களில் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
இந்தக் கருத்துக் கணிப்பில், சுதந்திரத்துக்குப் பின் அமைந்த அரசுகளிலேயே மிகவும் ஊழல் மிகுந்த அரசு இப்போதைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு தான் என்று 57 சதவீதத்தினர் கூறியுள்ளனர். இந்தக் கருத்தை கடந்த ஆண்டு 45 சதவீதத்தினர் மட்டுமே தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் நாட்டின் பெயரைக் கெடுத்துவிட்டதாக 54 சதவீதத்தினர் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்த ஊழலில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்குத் தொடர்பிருக்க முடியாது என்று 10 சதவீதம் பேர் மட்டுமே நம்புவதாகக் கூறியுள்ளனர்.
கடந்த காங்கிரஸ் கூட்டணி அரசை விட இப்போதைய அரசு பரவாயில்லை என்று 32 சதவீதம் பேரும், இப்போதைய அரசை விட கடந்த காங்கிரஸ் அரசே பெட்டர் என்று 40 சதவீதம் பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஊழலை ஒழிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 25 சதவீதம் பேரும், விலைவாசி- பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதே இந்த அரசின் முக்கிய பணியாக இருக்க வேண்டும் என்று 24 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.
நக்ஸல்களின் வளர்ச்சி கவலை தருவதாக 15 சதவீதம் பேரு கூறியுள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications