பெட்ரோல் விலை உயர்வில் திமுகவுக்கும் முழுப் பங்கு உண்டு: இடதுசாரிகள்

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து, கோவை காந்திபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர்,
பெட்ரோல் விலை உயர்வு மக்களுக்கு எதிரான முடிவாகும். மத்தியில் ஆட்சிப் பொறுப்பு ஏற்றுள்ள காங்கிரஸ் கட்சி மூன்று ஆண்டு காலம் நிறைவு செய்துள்ள நேரத்தில் பெட்ரோல் விலை உயர்வை மக்களுக்கு பரிசாக அளித்துள்ளது.
இது நாடு முழுவதும் உள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 15 சதவீதம் குறைந்துள்ள நிலையில் பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு மக்களுக்காக செயல்படாமல் எண்ணெய் நிறுவனங்களுக்கும், பெரிய நிறுவனங்களுக்கும் ஆதரவாக செயல்படுகிறது. பெட்ரோலுக்காக அதிக தொகை மானியம் கொடுப்பதாகக் கூறும் மத்திய அரசு பெட்ரோல் மீது 50 சதவீதத்தை வரியாகப் போட்டு பணம் ஈட்டி வருகிறது.
கடந்த ஓராண்டில் மட்டும் பெட்ரோல் மீதான வரி மூலம் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் மத்திய அரசு வருவாய் ஈட்டியுள்ளது. பெட்ரோல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயரும்.
இந்த பெட்ரோல் விலை உயர்வில் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுகவுக்கும் முழுப்பங்கு உண்டு என்றார்.
மத்திய அரசுக்கான ஆதரவை திமுக வாபஸ் பெற வேண்டும்-தா.பா:
இந் நிலையில் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திமுக வாபஸ் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கோரியுள்ளார்.
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர்,
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்ததும் எம்.பிக்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு இரவோடு இரவாக வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 7.50 உயர்த்தியிருக்கிறார்கள்.
மத்திய அரசு அமெரிக்காவின் சொல்படி செயல்பட்டு வருகிறது. மூன்றாண்டுகளை நிறைவு செய்துள்ள மத்திய அரசு மக்களுக்கு அளித்துள்ள பரிசுதான் இது. இன்னும் இரண்டு ஆண்டுகளும் காங்கிரஸ் அரசு நீடித்தால் மக்களிடம் எதுவும் மிஞ்சாது.
மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுக, மற்ற கட்சிகளைப்போல வெறும் கண்டனம் தெரிவித்தால் மட்டும் போதாது. பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திமுக திரும்பப் பெற வேண்டும்.
அரசியல் கட்சி என்ற முறையில் அதிமுகவும் விலை உயர்வுக்கு எதிராக போராட வேண்டும். அடுத்து வரும் தேர்தலில் காங்கிரஸையும், அதன் கூட்டணி கட்சிகளையும் மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications