மருமகளை இடைத்தேர்தல் களத்தில் இறக்கும் முலாயம் சிங்!

இதன் மூலம் முலாயம் சிங்கின் குடும்ப அரசியல் ஒரு முழு நிறைவை எட்டியுள்ளது. அவர், அவரது தம்பி, மகன் அகிலேஷ் அடுத்து மருமகள் டிம்பிள் என குடும்பத்து முக்கிய உறுப்பினர்கள் அனைவரும் தற்போது அரசியலுக்கு வந்து விட்டனர்.
கன்னோஜ் தொகுதியில் அகிலேஷ் யாதவ் உறுப்பினராக இருந்து வந்தார். அவர் உ.பி. முதல்வராக தேர்வானதைத் தொடர்ந்து தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அந்த இடத்திற்கு நடைபெறவுள்ள இடைத் தேர்தலில்தான் டிம்பிள் வேட்பாளராகியுள்ளார்.
கன்னோஜ் தொகுதி தொண்டர்கள் மற்றும் மக்களின் விருப்பத்தின் பேரிலேயே டிம்பிள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதாக சமாஜ்வாடிக் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், முலாயமின் தம்பியுமான ராம் கோபால் யாதவ் கூறியுள்ளார்.
இருப்பினும் டிம்பிளுக்கு அரசியல் புதிதில்லை. 2009ம் ஆண்டு அவர் பெரோஸாபாத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் தோல்வியடைந்தார். இதில் டிம்பிள் போட்டியிட்டதே ஒரு சுவாரஸ்யமான பின்னணியில்தான்.
அதாவது அந்த ஆண்டு நடந்த லோக்சபா பொதுத் தேர்தலில் கன்னோஜ் மற்றும் பெரோஸாபாத் என இரு தொகுதிகளில் அகிலேஷ் யாதவ் போட்டியிட்டு இரண்டிலும் வென்றார். பின்னர் பெரோஸாபாத்தை ராஜினாமா செய்தார். அங்கு தனது மனைவி டிம்பிளை போட்டியிட வைத்தார். ஆனால் நேரத்தைப் பாருங்கள், இந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நடிகர் ராஜ் பாப்பர் வென்று விட்டார், டிம்பிள் தோற்றுப் போனார்.
ராஜ்பாப்பர், இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு சமாஜ்வாடியில் இருந்தவர்தான். சீட் கிடைக்காதாலும், அமர்சிங்கின் ஆதிக்கத்தால் கடுப்பானதாலும் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார். பெரோஸாபாத் இடைத் தேர்தலில் போட்டியிட்டு டிம்பிளைதோற்கடித்து முலாயமுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் பாப்பர்.
இந்த்த தோல்விக்குப் பின்னர்தான் முலாயமுக்கும், அமருக்கும் பஞ்சாயத்தாகி அமரை கட்சியை விட்டுத் தூக்கினார் முலாயம் என்பது பிந்தைய வரலாறு.











Click it and Unblock the Notifications