கேரளாவில் பான் மசலா, குட்கா தயாரிக்க, விற்பனை செய்ய தடை
திருவனந்தபுரம்: கேரளாவில் பான் மசாலா மற்றும் குட்கா ஆகியவற்றை தயாரிக்கவும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் வாய் புற்றுநோய் அதிகரித்து வருவதாக அண்மையில் ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பான் மசாலா மற்றும் குட்கா ஆகியவற்றை தயாரிக்கவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில முதல்வர் உம்மன் சாண்டி, 2011-ம் ஆண்டின் உணவு பாதுகாப்பு மசோதாவின்படி நிக்கோட்டின் மற்றும் புகையிலை ஆகியவற்றை கொண்டுள்ள குட்கா மற்றும் பான் மசாலாவுக்கு கேரளாவில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்றும் மாநிலங்களின் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாநில அரசுகளே தடை சட்டத்தை கொண்டுவரலாம் என பிரதமர் கூறியதால் கேரளாவில் தடை உத்தரவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்..
இந்தியாவில் முதன்முதலாக மத்திய பிரதேசத்தில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்தப் பட்டியலில் தற்போது கேரளாவும் சேர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications