ஐ.நா. மனித உரிமை குழுவுக்கு இலங்கை அரசு அனுமதி மறுப்பு
கொழும்பு: ஐக்கிய நாடுகள் மனித உரிமை குழுவினர் இலங்கை வர அந்நாட்டு அரசு அனுமதி மறுத்துள்ளது.
ஐ.நா. மனித உரிமை குழு கடந்த 1993ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் தேதி ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் ஐ.நா. பொது சபை கூட்டத்தில் உருவாக்கப்பட்டது. தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம்பிள்ளை இந்த குழுவின் தலைவராக உள்ளார். அவர் தென்னாப்பிரிக்காவில் மூத்த நீதிபதியாக இருந்தவர். பின்பு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் குழுவில் முக்கிய உறுப்பினராக இருந்தவர்.
இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமை குழு தலைவர் நவநீதம்பிள்ளை கடந்த 14ம் தேதி இலங்கை வெளிநாட்டு விவகார அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.
அந்த கடிதத்தில், வரும் ஜூலை மாதம் ஐ.நா. மனித உரிமை குழு இலங்கைக்கு வர உள்ளதாக தெரிவித்திருந்தார். அவ்வாறு வரும் குழு இலங்கையில் போர் நடைபெற்ற பகுதிகளில் உள்ள பொது மக்களை சந்தித்து விசாரணை நடத்தும் என தகவல் வெளியானது.
இந்த நிலையில் இந்த குழுவினருக்கு அனுமதி வழங்க முடியாது என இலங்கை அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஏற்கனவே அண்மையில் நடந்த ஐ.நா. மனித உரிமை குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரி்க்கா தீர்மானம் கொண்டு வந்தது. இந்நிலையில் அந்த குழு நாட்டிற்குள் நுழைய இலங்கை அரசு அனுமதி மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications