1000 அடி மலை உச்சியில் பெண்ணுடன் குஜால்... கையும் களவுமாக மக்களிடம் சிக்கிய ஏட்டய்யா!
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே 1000 அடி உயர மலை உச்சியில் அங்கன்வாடியில் பணியாற்றும் பெண்ணுடன் பட்டப் பகலில் உல்லாசமாக இருந்த போலீஸ்காரரை ஊரே ஒன்று கூட கையும் களவுமாக பிடித்தது.
களியக்காவிளை அருகே சுமார் 1000 அடி உயர மலை உள்ளது. இந்த மலை உச்சியில் திருவிதாங்கூர் மார்த்தாண்ட வர்மா காலத்தில் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற சிவன் கோயில் உள்ளது.
மலை உச்சியில் தொலை தொடர்புக்காக காவல் நிலையங்களில் பயன்படுத்தப்படும் வயர்லெஸ் கருவிகள் மற்றும் வாக்கி டாக்கி உள்ளிட்ட உபகரணங்களுக்கான கட்டுப்பாட்டு அறை உள்ளது. இங்கு 24 மணி நேரமும் போலீஸார் ஷிப்ட் போட்டு காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று பிற்பகலில் ஒரு போலீஸ்காரர் இங்கு காவல் பணியில் இருந்தார். அப்போது 30 வயதுப் பெண் ஒருவர் மலை மீது ஏறிப் போனார். இதைப் பார்த்த சிறுவர்கள், ஒரு பெண் தனியாக மலை உச்சிக்குப் போவதைப் பார்த்து ஊர் மக்களிடம் போய் சொன்னார்கள்.
கோவிலில் திருட வந்த பெண்ணாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட ஊர் மக்கள் மொத்தமாக திரண்டு வந்தனர். மலைக்கு ஏறினர். மேலே போய்ப் பார்த்தபோது வாக்கி டாக்கி ரூமில் அந்தப் பெண்ணும், போலீஸ்காரரும் ஜாலியாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் மலையிலிரு்நது இருவரையும் கீழே கொண்டு வந்தனர். அந்தப் பெண் மார்த்தாண்டத்தைச் சேர்ந்தவர். அங்கன்வாடியில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கல்யாணமாகி பெண் குழந்தையும் இருக்கிறதாம்.
இதைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்ட பொதுமக்கள் அப்பெண்ணையும், அவருடன் உல்லாசமாக இருந்த போலீஸ்காரரையும் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications