ஜனாதிபதி தேர்தலுக்கு மின்னணு எந்திரம் இல்லை: வாக்குச் சீட்டு தான்!
டெல்லி: ஜனாதிபதி தேர்தலுக்கு வழக்கம் போல் வாக்குச்சீட்டு முறையே பயன்படுத்தப்படும் என்றும், மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் ஜூலை 25ம் தேதி முடிவடைவதால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய ஜூலை மாதம் இரண்டாவது வாரம் தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் அட்டவணையை வரும் 12ம் தேதி தலைமை தேர்தல் கமிஷன் வெளியிட உள்ளது.
ஜனாதிபதியை லோக்சபா, ராஜ்யசபா எம்.பிக்கள் மற்றும் மாநில சட்டசபைகளின் எம்.எ.ல்.ஏக்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்வர். நாடாளுமன்ற வளாகம் மற்றும் மாநில தலைநகரங்களில், பெரும்பாலும் சட்டமன்ற வளாகத்தில் ஓட்டுப்பதிவு நடைபெறும்.
தேர்தலுக்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இது தொடர்பான ஆலோசனையை தலைமை தேர்தல் கமிஷன் நடத்தி வருகிறது.
வழக்கமாக ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்குச்சீட்டு முறையே பயன்படுத்தப்படும். இந்த முறை மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கமான வாக்குச்சீட்டு முறையே பயன்படுத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி அறிவித்துள்ளார்.
ஓட்டுப் பதிவு முடிந்ததும் மாநிலங்களில் இருந்து வாக்குப் பெட்டிகள் டெல்லிக்கு கொண்டு செல்லப்படும். அங்கு வைத்து தான் மாநிலம் வாரியாக பெட்டிகள் திறக்கப்பட்டு வாக்குச் சீட்டுக்கள் எண்ணப்படும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications