மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் நான் மன்னிப்பு கேட்கவில்லை-ஷாருக்கான் பல்டி

மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் 5 தொடரின் லீக் போட்டி நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. அப்போட்டிக்கு சென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரும், நடிகருமான ஷாருக்கான் ரகளையில் ஈடுப்பட்டதாக, மும்பை மைதானத்திற்கு நுழைய 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. போட்டியின் முடிவில் பேசிய நடிகர் ஷாருக்கான், மும்பை மைதானத்தில் நடைபெற்ற சம்பவத்திற்கு தான் வருந்துவதாக தெரிவித்தார். இதனால் மும்பை கிரிக்கெட் வாரியத்திடம், ஷாருக்கான் மன்னிப்பு கேட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது அந்த செய்தியை நடிகர் ஷாருக்கான் மறுத்துள்ளார். மும்பை மைதானத்தில் நடந்த சம்பவத்திற்கு நான் மன்னிப்பு கேட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது
ஐபிஎல் 5 தொடரில் எங்கள் அணி வெற்றி பெற வேண்டும் என்று கருதிய போது, அதை சவாலாக எடுத்துக் கொண்டேன். இந்த வெற்றி எனது வாழ்வில் மிகப்பெரிய பாடமாகும்.
மும்பை மைதானத்தில் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்ட விவகாரம் குறித்து நான் விவரமாக பேச விரும்பவில்லை. ஒரிடத்தை நான் சென்ற பிறகு என்னை குறித்து எனக்கு விருப்பம் இல்லாத செய்தியை ஒருவர் தெரிவிக்கலாம். என்னுடைய தற்போதைய நிலையில் சில செய்திகளை கேட்காமல் இருக்க, காதுகளுக்கு பஞ்சு வைத்து கொள்வது நல்லது என்று கருதுகிறேன். இதற்காக பொது இடங்களுக்கு செல்வதை குறைத்து கொள்ள முடிவு செய்துள்ளேன்.
மும்பை மைதானத்தில் நடந்த சம்பவத்திற்காக, நான் பார்வையாளர்களிடம் மன்னிப்பு கேட்டேன். இதற்காக நான் மும்பை கிரிக்கெட் வாரியத்திற்கு எதிரானவன் என்று பொருள் கொள்ள கூடாது. எனது பேச்சை தவறாக புரிந்து கொள்ளும் நபர்களுக்கு நான் எதிரானவன். மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் மன்னிப்பு கேட்டேன் என்ற செய்தியில் உண்மையில்லை என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications