டெல்லியில் எம்.எல்.ஏவை துப்பாக்கியால் சுட்ட மர்ம கும்பல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தலைநகர் டெல்லியில் நஜப்கார் தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ.பரத்சிங் இன்று காலையில் மர்ம மனிதர்களால் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நஜப்கார் தொகுதிக்குட்பட்ட சாரங்க்பூர் கிராமத்தில் இன்று காலை 8.30 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றது. துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கிராமத்து விவசாயி தர்மபால் என்பவரும் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த இருவரும் மிகவும் ஆபத்தான நிலைமையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். முன்விரோதம் காரணமாக இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்திருக்கலாம் என்பது போலீசாரின் கருத்து.
எம்.எல்.ஏ. பரத்சிங்கின் சகோதரரும் டெல்லி கவுன்சிலருமான கிருஷ்ணன் பல்வான் மீது ஏற்கெனவே பல வழக்குகள் பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications