தூத்துக்குடி அருகே பிரபல ரவுடி வெட்டிக் கொலை- மர்மநபர்களுக்கு வலை!
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பிரபல ரவுடியான சிவா என்ற சிதம்பரத்தை மர்மநபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி அருகே வல்லநாட்டில் வசிப்பவர் பிரபல ரவுடி சிவா என்ற சிதம்பரம். இவர் மீது ஏற்கனவே 3 கொலை வழக்குகள் உள்பட பல வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது.
மேலும் ரவுடி சிவாவிற்கு தூத்துக்குடியில் எதிரிகள் அதிக அளவில் உள்ளதால், அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடி அருகே வல்லநாட்டில் ரவுடி சிவா என்ற சிதம்பரத்தை மர்ம நபர்கள் சிலர் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிவிட்டனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவா உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு சிவாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications