மதுரை ஆதீன மடத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள மகனை மீட்டுத் தரக் கோரி பெற்றோர் கதறல்!

ஒரத்தநாட்டைச் சேர்ந்த திருப்பதி - பூர்ணம் தம்பதியினர் இன்று காலை மதுரை போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து ஒரு புகார் மனுவைக் கொடுத்தனர்.
அதில், எங்களது இளைய மகன் ராகவன். இவனை மதுரை ஆதின மடத்தில் நித்தியானந்தா சீடர்கள் அடைத்து வைத்துள்ளனர். ராகவனை தொடர்பு கொண்டு நாங்கள், மதுரை ஆதின மடத்திற்குள் சென்று அவனை மீட்க முயன்றபோது, நித்தியானந்தா ஆட்கள் எங்களை உள்ளே விடாமல் தடுத்து மிரட்டுகின்றனர்.
கடந்த ஒரு வாரமாக நாங்கள் ராகவனை திருவண்ணாமலை மற்றும் பெங்களூரு அருகில் உள்ள பிடதியில் தேடி அலைந்தோம். மதுரை ஆதின மடத்தில் ராகவனை அடைத்து வைத்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் நாங்கள் மதுரை ஆதின மடத்திற்கு நேரில் வந்து அழைத்துச் செல்ல முற்பட்டபோது, மதுரை ஆதினமும், நித்தியானந்தா சீடர்களும் எங்களை மிரட்டி வெளியே துரத்தினர்.
என் மகன் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என பயம் உள்ளது. சட்டவிரோதமாகவும் அடைத்து வைத்துள்ளனர். அவனை மீட்டு எங்களிடம் ஒப்படைக்குமாறு கோரியிருந்தனர். இதையடுத்து இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு விளக்குத்தூண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேலுக்கு ஆணையர் உத்தரவிட்டார்.
இதையத் தொடர்ந்து கதிர்வேல் தலைமையிலான போலீஸ் படை மதுரை ஆதீன மடத்திற்குள் சென்றுள்ளது. அங்கு இருப்பதாக கூறப்படும் ராகவனை மீட்டு வரும் வரை அவரது பெற்றோர் விளக்குத்தூண் காவல் நிலையத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications