மீண்டும் கலாமுடன் பாஜக குல்கர்னி சந்திப்பு: அத்வானியும் தொலைபேசியில் பேச்சு

இது தொடர்பாக விவாதிக்க நேற்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் நடைபெற்றது. ஆனால் கூட்டத்தில் ஒருமித்த கருத்து எதுவும் எட்டப்படவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்பு நேற்று 3 வாய்ப்புகள் இருந்தன. பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பது?அல்லது சங்மாவை ஆதரிப்பது? அல்லது கலாமை நிறுத்துவது? என்ற 3 வாய்ப்புகளில் கூட்டணிக் கட்சிகளிடையே மாறுபட்ட கருத்து இருந்தது.
இந்நிலையில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தலைவர் பகவத், அப்துல் கலாமை மீண்டும் நிறுத்தலாம் என்று நேற்று ஹரித்வாரில் கூறியிருந்தது ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. இதேபோல் அப்துல்கலாமை இன்று அதிகாரப்பூர்வமாக வேட்பாளராக அறிவிக்க மமதா பானர்ஜியும் முடிவு செய்திருக்கிறார்.
இந்த சூழலில் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது பாஜகவின் காய்நகர்த்தல்கள். இன்று காலையில் பாஜக மூத்த தலைவர் சுதீந்தரா குல்கர்னி, அப்துல் கலாம் வீட்டுக்குச் சென்று ஆலோசனை நடத்தினார். பின்னர் மீண்டும் பிற்பகலிலும் கலாமை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார் குல்கர்னி.
அதே போல பாஜக தலைவர் அத்வானியும் கலாமுடன் தொலைபேசியில் பேசினார். இதைத் தொடர்ந்து அனேகமாக கலாமுக்கான ஆதரவை பாஜக உறுதி செய்திருப்பதாகவே தெரிகிறது.
திமுக, அதிமுவுக்கு சிக்கல்?
தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்துல்கலாம் வேட்பாளராக நிறுத்தப்படும் பட்சத்தில் சங்மாவை ஜெயலலிதா ஆதரிப்பாரா? அல்லது பிரியத்துக்குரிய பாஜகவின் ஆதரவு பெற்ற கலாமை ஆதரிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதைவிட சிக்கலான நிலைமை திமுகவுக்குத்தான். தமிழினப் பகைவர் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவாக வாக்களிப்பதா? தமிழரான கலாமுக்கு ஆதரவளிப்பதா? என்ற கேள்வி திமுக முன் உள்ளது. திமுகவின் தேர்வு பிரணாப் முகர்ஜியாக இருந்தால் நிச்சயம் அது அந்த கட்சிக்கு வரலாற்றுப் பின்னடைவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.
-
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications