தேர்தல் அதிகாரி தாக்கப்பட்ட வழக்கில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மனு தள்ளுபடி
மதுரை: தேர்தல் அதிகாரி தாக்கப்பட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி மத்திய அமைசசர் மு.க.அழகிரி தாக்கல் செய்த மனுவை மேலூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு அழகிரி, மதுரை மாநகராட்சி துணை மேயர் பி.எம்.மன்னன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி மேலூர் அம்பலக்காரன்பட்டியில் உள்ள ஸ்ரீ வல்லடிக்காரர் கோவிலுக்கு சென்றார். அப்போது தாசில்தார் காளிமுத்துவுடன் வந்த தேர்தல் வீடியோகிராபர் கண்ணன் படம் எடுக்க முயன்றார். இதை திமுகவினர் தடுத்ததோடு, வீடியோகிராபரிடம் இருந்து கேமராவை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் தாசில்தாரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து தாசில்தார் கொடுத்த புகாரின் பேரில் மு.க.அழகிரி, துணை மேயர் பி.எம்.மன்னன், மேலூர் ஒன்றிய செயலாளர் ரகுபதி, ஒத்தப்பட்டி திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது கீழவளவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை மேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் மத்திய அமச்சர் மு.க. அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 20 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி மு.க.அழகிரி உள்பட 21 பேரும் மேலூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனு மேலூர் மாஜிஸ்திரேட் ஜெய்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் மு.க.அழகிரி உள்பட 21 பேரையும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications