For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேச்சுவார்த்தைக்கு வந்த சிபிஐ நிர்வாகிகளை கைது செய்வதா?: தா.பாண்டியன் கண்டனம்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: திருவண்ணாமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பதற்கு அக்கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் பக்கிரிப்பாளையம் ஊராட்சியில் தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் அடிப்படையில் பணியாற்றிய 200-க்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தங்கராசு, செங்கம் நகரச் செயலாளர் சர்தார் உள்பட 6 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக காவல்துறையின் இந்தத் தவறான நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். கைது செய்யப்பட்ட நிர்வாகிகள் அனைவரையும் விடுவிப்பதுடன், அவர்கள் மீதான் பொய் வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
CPI state secretary Tha. Pandian condemned the arrest of 6 of his party functionaries in Tiruvannamalai. He wants the police to free them apart from quashing the FIR.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X