கண்ணீர்ப்புகை குண்டுகளுடன் கேரள சட்டசபைக்கு வந்த சிபிஎம் எம்.எல்.ஏ.
திருவனந்தபுரம்: மாணவர்களின் போராட்டத்தை போலீசார் எவ்வாறு அடக்குகின்றனர் என்பதை அனைவருக்கும் தெரிவிக்க சிபிஎம் எம்.எல்.ஏ. ஜெயராஜன் கேரள சட்டசபைக்கு 2 கண்ணீர்ப்புகை குண்டுகளை எடுத்து வந்தார்.
கடந்த 14ம் தேதி கேரள முதல்வர் உம்மன் சாண்டி பேசுவதாக இருந்த இடத்தில் எஸ்எப்ஐ தலைவர் அனீஷ் ராஜனை கொன்றவர்களை கைது செய்யக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசியும் மாணவர்களை கலைந்து போகச் செய்தனர்.
இந்நிலையில் இன்று காலை கேரள சட்டசபை கூடி நடந்து கொண்டிருந்தது. அப்போது சிபிஐ எம்.எல்.ஏ. ஜெயராஜன் எழுந்து 2 கண்ணீர்ப்புகை குண்டுகளை காட்டினார். இதனால் சட்டசபையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு சட்டசபை தலைவர் ஜி. கார்த்திகேயன் மற்றும் உள்துறை அமைச்சர் திருவாச்சூர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சட்டசபைக்குள் வெடிபொருட்களை கொண்டு வருவது விதிமுறைக்கு புறம்பானது என்று கூறி அவற்றைப் பறிமுதல் செய்ய அவைத் தலைவர் உத்தரவிட்டார். இதையடுத்து மாணவர்களின் போராட்டத்தை நசுக்கிய விதம் குறித்துப் பேச சட்டசபை நடவடிக்கைகளை ஒத்திவைக்கக் கோரி இடது சாரிகள் வலியுறுத்தினர்.
ஆனால் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர கார்த்திகேயன் மறுத்ததால் இடது சாரிகள் வெளிநடப்பு செய்தனர்.
மாணவர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததுடன் கல்லை வீசியதால் தான் போலீசார் அவர்களை கலைந்து போகச் செய்ய வேண்டியிருந்தது என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications