தீவிரவாதிகள் அச்சுறுத்தல்: குருவாயூர் முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்தம்
குருவாயூர்: பயங்கரவாதிகள் அச்சுறுத்தலை அடுத்து குருவாயூர் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.
கேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு ஏற்கனவே பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் உள்ளது. இதையடுத்து கோவிலின் பாதுகாப்பை பலப்படுத்தவும், கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் கேரள அரசு முடிவு செய்தது. அதன்படி கோவிலில் உள்ள மூலவர் சன்னதி, பிரகாரம் உள்பட பல இடங்களில் 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதற்கென்று கட்டுப்பாட்டு அறை ஒன்றும் இயங்கி வருகிறது.
இந்நிலையில் கோவிலுக்கு வெளியே, கேரள மாநில அரசு போக்குவரத்துக் கழக பேருந்து நிலையம், தனியார் பேருந்து நியைம், ரயில் நிலையம், முக்கிய சாலை சந்திப்புகள், என்று குருவாயூரில் பல இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
இதற்காக கட்டுப்பாட்டு அறைகள் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது. பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் குருவாயூரில் எந்தவித பதட்டமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தான் மாநில அரசு இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
விரைவில் புதிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கட்டுப்பாட்டு அறைகள் அமைப்பது தொடர்பாக உயர்மட்டக் குழு அமைக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications