ஜெயலலிதா நேற்று நடத்தி வைத்த 1006 திருமணத்துக்கான செலவு ரூ. 4.5 கோடியாம்!

தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை மூலம் 1006 ஜோடிகளுக்கு சென்னை திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் வளாகத்தில் நேற்று இலவசத் திருமணம் நடைபெற்றது. முதல்வர் ஜெயலலிதா தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
மிகப் பெரிய அளவில் நடந்த இந்தத் திருமணம் ஜெயா டிவியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்தத் திருமணத்திற்கு ரூ. 4.5 கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கி்ன்றன.
இந்தத் திருமணத்தை முழுக்க முழுக்க இந்து அறநிலையத்துறையே செய்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகள், மணமக்களுக்கான தாலி, வெள்ளிரப் பொருட்கள், திருமண சீர் வரிசைப் பொருட்கள், ஜவுளி, போக்குவரத்து, சாப்பாடு உள்ளிட்ட சகலத்தையும் இந்து அறநிலையத்துறையே கவனித்தது.
ஒவ்வொரு ஜோடிக்கும் தலா 21 வகை சீர்வரிசைப் பொருட்களை அரசு கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மணமக்களை அவர்களது குடும்பத்திருடன், ஊரிலிருந்து கூட்டி வந்து பின்னர் திருப்பி அனுப்புவதற்கான செலவு, தங்குமிட வசதி, உணவு உள்ளிட்டவற்றையும் இலவசமாகவே இந்து அறநிலையத்துறை செய்து கொடுத்தது.
இந்தத் திருமணச் செலவு போக முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்க அதிமுகவினரும் பிரமாண்ட ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அவரது இல்லம் முதல் திருமணப் பந்தல் வரை வழி நெடுகிலும் தோரணங்கள், பேனர்கள், பிளக்ஸ்கள் என கலக்கி விட்டனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
இவ்வளவு ஆடம்பரமாக, தடபுடலாக திருமணம் நடந்தபோதிலும் மாற்றுத் திறனாளி ஜோடி ஒன்று மிகுந்த நன்றிப் பெருக்குடன், முதல்வர் ஜெயலலிதாவை வாழ்த்தியபடி கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்க சென்ற காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது.












Click it and Unblock the Notifications