குற்றாலத்தில் அரிய வகை மருத்துவ குணம் கொண்ட பழங்கள் விற்பனை

குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சீசன் காலமாகும். சீசனின் போது பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் வந்து அருவிகளில் குளித்து மகிழ்வர். குடும்பத்தினருடன் சுற்றுலா வரும் பயணிகள் அனைத்து அருவிகளிலும் குளித்து முடித்தவுடன் குற்றாலம், ஐந்தருவி பகுதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் அரிய வகை பழங்களை விரும்பி வாங்கிச் செல்வார்கள்.
தற்போது குற்றாலத்தில் மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடிய மருத்துவ குணம் கொண்ட அரிய வகை பழங்களான மங்குஸ்தான், ரம்டான், துரியன், முட்டைப்பழம், மனோரஞ்சிதம் பழம் போன்ற பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கொடைக்கானல், குற்றாலம் போன்ற மலைப்பகுதிகளில் மட்டுமே மங்குஸ்தான், ரம்டான் பழங்கள் விளைகின்றன. ஆண்மையை அதிகரிக்கும் மருத்துவ குணம் கொண்ட துரியன் பழம் இங்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஊட்டி, குற்றாலம் போன்ற பகுதிகளில் கடந்த ஆண்டு கிலோ 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட துரியன் பழம் இந்த ஆண்டு 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. குளிர்ச்சியை ஏற்படுத்தும் ரம்டான் ரூ.150 லிருந்து ரூ.400 வரையிலும், மங்குஸ்தான் ரூ.320க்கும், முட்டைப்பழம் ரூ.150க்கும், பிளம்ஸ் ரூ.120க்கும், சப்போட்டா ரூ.30க்கும், பேரிக்காய் ரூ.80க்கும், மாதுளை ரூ.150க்கும், ஸ்டார்புரூட் ரூ.120 ரூபாய்க்கும், கொய்யா, நெல்லி ரூ.40க்கும், மாம்பழம் தரத்திற்கு ஏற்றாற்போல் 20 ரூபாயில் இருந்து 150 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications