வீடு புகுந்து தாய், மகளை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு தூக்கு தண்டனை

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் வீடு புகுந்து தாய், மகளை பலாத்காரம் செய்து அவர்களை கொலை செய்தவருக்கு அம்மாநில நீதி்மன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பீருமேடு பகுதியைச் சேர்ந்தவர் மோளி. அவருடைய மகள் நீனு. மோளியின் கணவர் பல ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால் மோளியும், நீனுவும் தனியாக வசித்து வந்தனர். கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி இரவு இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் அம்மி கல்லால் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்த 2 பேர் மோளியையும், நீனுவையும் பலாத்காரம் செய்தனர். பின்னர் அவர்கள் தாயும், மகளையும் இரும்புக் கம்பியால் தாக்கியும், கத்தியால் குத்தியும் கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பீருமேடு போலீசார் வண்டிபெரியார் பகுதியைச் சேர்ந்த ஜோமோன், ராஜேந்திரன் ஆகிய இருவரை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த ஜோமோன் தலைமறைவானார். அவரை போலீசாரால் பிடிக்க முடியவில்லை. இந்த வழக்கு தொடுபுழா கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் நேற்று தீர்ப்பு அளித்த நீதிபதி மாத்துக்குட்டி ராஜேந்திரனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் ரூ.50,000 அபராதமும் விதித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+