சிரிய உள்நாட்டுப் போரில் உச்சகட்ட கொடூரம்- ஒரே நாளில் 170 பேர் பலி
டமாஸ்கஸ்: சிரியாவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் நேற்று ஒரே நாளில் 170 பேர் பலியாகி இருப்பதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
சிரிய அதிபர் பஷார் கல்ஸ்ஸாத்துக்கு எதிரான கிளர்ச்சியில் நூற்றுக் கணக்கில் பொதுமக்களை ராணுவம் படுகொலை செய்து வருகிறது. சிரியாவில் ஏப்ரல் 21- ந் தேதி போர் நிறுத்தத்தை ஐக்கிய நாடுகள் சபை அறிவித்த பின்னர் நேற்று ஒரே நாளில் மட்டும் 170 பேர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமைகள் அமைப்பின் நிர்வாகி ரமி அப்தேல் தெரிவித்துள்ளார்.
நேற்றைய வன்முறையில் 104 பொதுமக்களும், 54 படையினரும் உயிரிழந்திருக்கின்றனர். ஹோம்ஸ் மாகாணப் பகுதியில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சுமார் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வரும் சிரிய உள்நாட்டுப் போரில் சுமார் 15 ஆயிரம் பேர் வரை படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே சிரிய போர் விமானத்தை இயக்கி வந்த பயிற்சி விமானி ஒருவர் ஜோர்டான் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். அவருக்கு ஜோர்டான் அடைக்கலம் கொடுப்பதாகவும் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications