செல்போன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் முறைகேட்டை தடுக்கலாம்: கே.எச். முனியப்பா
திருப்பதி: ரயில் பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை செல்போன் மூலம் முன் பதிவு செய்து கொள்வதன் மூலம் பெருமளவு முறைகேடுகளைத் தடுக்கலாம் என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் கே.எச். முனியப்பா தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தட்கல் முறையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க, ரயில்வே நிர்வாகம் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரயில் டிக்கெட் முன்பதிவுக்காக இடைத்தரகர்கள் அல்லது முகவர்களை பயணிகள் நாடுகின்றனர். இதைத் தடுக்க பயணிகள் தங்கள் மொபைல் போனிலேயே முன்பதிவு செய்யலாம்.
இதற்காக காலை 8 மணி முதல் 10 மணி வரை முகவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முறைகேடுகள் பெருமளவில் தடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் 3100 கி.மீ. தூரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஒயிட்பீல்டு - கோலார், குடுச்சி - பாகல்கோட், தும்கூர் - தாவன்கரே மற்றும் ஷிமோகா - ஹரிஹார் பகுதிகளில் ரயில் பாதை அமைக்க மாநில அரசு இலவசமாக நிலங்களை அளிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளது என்றார் அவர்.,












Click it and Unblock the Notifications