ஆதர் அடுக்கு மாடி குடியிருப்பு ஊழல்: விசாரணைக் கமிஷன் முன்பு முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் ஆஜர்
மும்பை: ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பு முறைகேடு தொடர்பாக இருநபர் விசாரணைக் கமிஷன் முன்பு முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் ஆஜராகினார்.
மும்பை கொலபாவில் ஆதர்ஷ் வீட்டுவசதி சங்கத்தின் சார்பில் 32 அடுக்குமாடி குடியிருப்பு கார்கில் வீரர்களுக்கு ஒதுக்கப்படாமல் ரசியல்வாதிகளுக்கு ஒதுக்கப்பட்டது என்பது புகார்.
இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. ஏற்கனவே விசாரணை நடத்தி வருகிறது. அதேநேரத்தில் மராட்டிய அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி ஜெ.ஏ. பாட்டீல் தலைமையிலான இருநபர் விசாரணை கமிஷனை அமைத்தது.
விசாரணைக் கமிஷன் முன்பு முன்னாள் முதல்வரும் தற்போதைய மத்திய அமைச்சருமான சுசில்குமார் ஷிண்டே நேற்று ஆஜரானார். ஆதர்ஷ் சங்கத்திற்கு அருகில் உள் "பெஸ்ட்' நிலத்திலிருந்து கூடுதலாக நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது விலாஸ்ராவ் தேஷ்முக் முதல்வராக இருந்தபோது தான் என்று ஷிண்டே கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த விசாரணைக் கமிஷன் முன்பு விலாஸ்ராவ் தேஷ்முக் இன்று ஆஜராகினார்.
கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களின் வாரிசுகளுக்காக மும்பை கொலபாவில் 31 மாடிகளை கொண்ட ஆதர்ஷ்' அடுக்குமாடி குடியிருப்ப கட்டப்பட்டது.












Click it and Unblock the Notifications