அண்ணா மேம்பால விபத்தில் காயமடைந்த முதியவர் உயிர் ஊசல்- டிரைவரின் இரு கால்களும் முறிந்து போயின!

சென்னை அண்ணா சாலை, அண்ணா மேம்பாலத்தில் இன்று 17 எம் என்ற நகரப் பேருந்து தடுப்புச் சுவரைத் தாண்டி வந்து சாலையில் விழுந்தது. இதில் 38 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 28 பேரின் அதிகளவில் காயத்தைச் சந்தித்திருந்ததால் அவர்களை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றினர். 7 பேர் தொடர்ந்து ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதியவர் உயிர் ஊசல்
இந்த விபத்தில் 62 வயதான முருகபூபதி என்ற முதியவர் படுகாயமடைந்துள்ளார். அவரது நிலைமை மோசமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டிரைவரின் இரு கால்களும் முறிந்து விட்டன
இந்த பஸ்ஸை பிரசாத் என்பவர்தான் ஓட்டி வந்தார். விபத்தில் அவரும் பெரும் காயத்தைச் சந்தித்துள்ளார். அவருக்கு இருகால்களும் முறிந்து போய் விட்டன. அவரது நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஆறுதல் கூறினார்
விபத்து நடந்த செய்தி அறிந்ததும் அமைச்சர் பா.வளர்மதி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அதேபோல மருத்துவமனைக்கும் சென்று காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதேபோல மாநகர காவல்துறை ஆணையர் ஜே.கே.திரிபாதி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரடியாக மீட்புப் பணிகளை முடுக்கி விட்டார்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications