சங்கரன்கோவில் அருகே மணல் லாரி மோதி மணப்பெண் உள்பட 30 பேர் காயம்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே திருமண கோஷ்டி சென்ற வேன் மீது மணல் லாரி மோதியதில் மணப்பெண் உள்பட 30 பேர் காயம் அடைந்தனர்.
சங்கரன்கோவில் அருகே பெரியகோவிலான்குளத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் மாடசாமி என்பவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த கணபதி மகள் விஜயா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்று கழுகுமலை கோவிலில் திருமணம் நடக்க இருந்தது. திருமண கோஷ்டியினர் இன்று காலை பெரியகோவிலான்குளத்தில் இருந்து வேனில் கோவிலுக்கு புறப்பட்டனர். வேனை அதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமி ஓட்டினார். வேனில் மணப்பெண் விஜயா உள்பட 30 பேர் இருந்தனர்.
மாப்பிள்ளை மற்றும் பலர் டாடா சுமோவில் பின்னால் வந்தனர். சங்கரன்கோவில் அருகே உள்ள அழகனேரியில் எதிரே வந்த மணல் லாரி வேன் மீது மோதியது. இதில் வேன் கவிழ்ந்ததில் மணப்பெண் விஜயா, டிரைவர் கருப்பசாமி, விக்னேஷ், அன்பு செல்வி உள்பட 30 பேர் காயம் அடைந்தனர். மணப்பெண் உள்ளிட்ட 6 பேர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையிலும், மீதமுள்ள 24 பேர் பாளை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகினறனர். இது குறித்து குருவிகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications