மும்பை ஸ்டைலில் மேலும் ஒரு தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டினேன்: அபு ஜிண்டால் தகவல்

சவூதி அரேபியால் பதுங்கியிருந்து பிடித்து கொடுக்கப்பட்ட அபு ஜிண்டால் டெல்லி போலீஸின் கஸ்டடியில் பல்வேறு தகவல்களைத் தெரிவித்திருக்கிறான். அதில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு எப்படியெல்லாம் தொடர்பு இருந்ததையும் போட்டு உடைத்திருக்கிறான்.
இதேபோல் லாகூர் போலீஸ் அகாதெமி மீது நடத்தப்பட்ட தாக்குதலை வீடியோ படம் பிடித்து அதே பாணியில் நாசிக்கில் உள்ள போலீஸ் அகாதெமியை தாக்கவும் திட்டம் தீட்டியிருந்ததாகவும் கூறியிருந்தான் அபு ஜிண்டால்.
தற்போது மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர்26-ந் தேதி நடத்தப்பட்ட தாக்குதலைப் போன்றே இந்தியாவின் வேறு ஒரு நகரத்தில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியிருந்ததாகவும் ஆனால் அது எந்த நகரம் என்பதை முடிவு செய்யாமல் இருந்ததாகவும் கூறியிருக்கிறான். மும்பை தாக்குதல் 4 நாட்கள் நடைபெற்றது. 166பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சிமி இயக்கம் தடை செய்யப்பட்ட பிறகு பலரும் வெவ்வேறு தீவிரவாத இயக்கங்களில் சேர்ந்திருப்பதையும் அபு ஜிண்டால் தெரிவித்திருக்கிறான். மும்பை தாக்குதல் முடிந்த பிறகு தன்னை முழுவதுமாக ஒரு பாகிஸ்தான் நாட்டுக் குடிமகனாக காட்டிக் கொள்ளும் நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறான் ஜிண்டால். இதற்காகவே 2009-ம் ஆண்டு கராச்சி நகரைச் சேர்ந்த பெண் ஒருவரையும் திருமணம் செய்து கொண்டிருக்கிறான். இந்தியாவுடனான அனைத்து தொடர்புகளையும் மெதுமெதுவாக கைவிடும் வேலையிலும் மும்முரம் காட்டியிருந்திருக்கிறான் ஜிண்டால் என்கின்றனர் விசாரணை நடத்திய போலீஸார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications