மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன் கார் மோதி 2 பேர் படுகாயம்: கார் டிரைவர் மீது வழக்கு
நாமக்கல்: நாமக்கல் அருகே வேகமாக காரை ஓட்டிச் சென்று இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்திய மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வனின் டிரைவர் பிரபாகரன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நாமக்கல் தில்லலைபுரத்தில் திமுக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் காந்திசெல்வன் வீடு உள்ளது. அவர் நேற்று காலை 10.30 மணியளவில் பரமத்தியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நாமக்கல் நோக்கி தனது இன்னோவா காரில் சென்று கொண்டிருந்தார். காரை சேந்தமங்கலத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் ஓட்டினார்.
அந்த கார் நாமக்கல் ஈ.பி. காலனி அருகில் உள்ள ஒரு தனியார் வங்கி அருகே அதிவேகமாகச் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து அவ்வழியாகச் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருந்த நாமக்கல் எம்.ஜி.ஆர். நகர் விஸ்வநாதன் (50) என்பவரது இடது கால் எழும்பு முறிந்தது. இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற நாமக்கல் ஈ.பி. காலனி வீரப்பன் (55) என்பவர் படுகாயம் அடைந்தார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக காந்திசெல்வன் கார் டிரைவர் பிரபாகரன் மீது நாமக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications