குடியரசு துணைத் தலைவர்: மீண்டும் தென்னகத்தை புறக்கணித்து மரபுகளை காற்றில் பறக்க விடும் காங்.!

குடியரசுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில் ஆரம்பம் முதலே ஒரு மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது குடியரசுத் தலைவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தால், துணைத் தலைவர் தென் மாநிலத்தவராக இருப்பார். இதுதான் ராஜேந்திர பிரசாத் முதன் முதலில் குடியரசுத் தலைவரானது முதல் நடந்து வந்தது.
இடையில் 2 முறை இரு பதவிகளிலும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் இருந்துள்ளனர். அதாவது, 2வது குடியரசுத் தலைவராக தென்னகத்தைச் சேர்ந்த டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் இருந்தபோது, துணைக் குடியரசுத் தலைவராக தென்னகத்தைச் சேர்ந்த ஜாகீர் உசேன் இருந்தார்.
அதேபோல வட மாநிலத்தைச் சேர்ந்த வி.வி.கிரி குடியரசுத் தலைவராக இருந்தபோது துணைக் குடியரசுத் தலைவராக வட மாநிலத்தைச் சேர்ந்த கோபால் ஸ்வரூப் பாதக் இருந்தார். ஆனால் மற்ற சமயங்களில் இரு பகுதிகளையும் சேர்ந்தவர்களே மாறி மாறி இப்பதவிகளை அலங்கரித்தனர்.
இந்த மரபை காங்கிரஸ் கட்சி மீண்டும் பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவரானபோது மீறியது. அதாவது துணைக் குடியரசுத் தலைவராக வட மாநிலத்தைச் சேர்ந்த ஹமீத் அன்சாரியை நியமித்தனர்.
இந்த நிலையில் மறுபடியும் மரபை மீற முனைந்துள்ளது காங்கிரஸ். குடியரசுத் தலைவர் பதவிக்கு பிரணாப் முகர்ஜியை நிறுத்தியுள்ள காங்கிரஸ் கட்சி, துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு வட மாநிலத்தைச் சேர்ந்தவரான அன்சாரியையே மீண்டும் நிறுத்த தீர்மானித்துள்ளது. இதற்காக ஆதரவையும் திரட்ட ஆரம்பித்துள்ளது.
இதன் மூலம் இது நாள் வரை இருந்து வந்த மரபை மீறுவதோடு மட்டுமல்லாமல், தொடர்ந்து 2வது முறையாக தென்னகத்தையும் காங்கிரஸ் கட்சி புறக்கணிக்க தீர்மானித்துள்ளது.
இந்த மரபை ஆரம்பத்திலிருந்தே ஆதரித்து வந்த கட்சிகளில்முக்கியமானது திமுகதான். ஆனால் கடந்த முறையும் இந்த மரபு மீறல் குறித்து திமுக அலட்டிக் கொள்ளவில்லை. இந்த முறையும் அது எதுவும் பேசுவதாகத் தெரியவிலல்லை.
தென்னகத்தின் மீது காங்கிரஸுக்கு ஏன் இவ்வளவு கோபமோ...?
-
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications