வீரபாண்டி ஆறுமுகம் மீது இன்னொரு நில அபகரிப்பு புகார்!
சேலம்: முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது மற்றொரு நில அபகரிப்பு புகார் தரப்பட்டுள்ளது.
முன்னாள் ராணுவ வீரரான சண்முகம் (50) என்பவர் சேலம் மாவட்ட எஸ்.பி அஸ்வின் கோட்னிசிடம் தந்துள்ள புகாரில்,
சேலம் -கோவை நெடுஞ்சாலையில் உத்தமசோழபுரம் சிரஸ்தர்காட்டில் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சொந்தமான பொறியியற் கல்லூரிக்கு அருகில் எனது தந்தை கே.நல்லப்பனுக்கு (75) சொந்தமாக 2.36 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலையில் அப்பகுதியில் ஐடி பார்க் வரவிருப்பதாகக் கூறி வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளர் சேகரும் முன்னாள் தாசில்தார் ஸ்ரீரங்கநாதரும் அந்த நிலத்தை வீரபாண்டி ஆறுமுகத்திடம் தருமாறு அவரிடம் கேட்டுள்ளனர்.
நிலத்தைத் தராவிட்டால் அரசு நிலத்தை குறைந்த விலைக்கு எடுத்துக் கொள்ளும் என்றும் அவர்கள் மிரட்டினர்.
ஆனால் எனது தந்தை நல்லப்பன் தர மறுத்தார். எனவே அவரை அழைத்துக் கொண்டு வீரபாண்டி ஆறுமுகத்தின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
அங்கு எனது தந்தையை மிரட்டி நிலத்தை பத்திரம் செய்து கொண்டனர். அதில் எனக்கு சேர வேண்டிய 0.57 சென்ட் நிலத்தை எனது கையெழுத்து இல்லாமல் பத்திரம் செய்துள்ளனர். அந்த நிலத்தின் மதிப்பு தற்போது ரூ 2 கோடி.
எனவே மோசடியாக நிலத்தை பறித்துக் கொண்ட வீரபாண்டி ஆறுமுகம், அவரது மகன் ராஜா, வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளர் சேகர், முன்னாள் தாசில்தார் ஸ்ரீரங்கநாதன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சண்முகம் தனது புகாரில் கூறியுள்ளார்.
வீரபாண்டி ஆறுமுகம் அங்கம்மாள் காலனி வழக்கு, நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளில் சிக்கி தற்போது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வீரபாண்டி ஆறுமுகம் நாளை சென்னையில் ஆஜர்:
இந் நிலையில் வீரபாண்டி ஆறுமுகத்தை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டது தவறு என்று கூறி அவரது துணைவியார் சென்னை அட்வைசரி போர்ட்டில் மனு செய்துள்ளார்.
இதன் மீது நாளை விசாரணை நடக்கிறது. வீரபாண்டி ஆறுமுகத்திற்காக மூத்த வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகிறார். போலீஸ் தரப்பில் பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் ஆஜராகி விளக்கம் தர உள்ளார்.
ஒரு மாதத்திற்கு மேலாக வேலூர் சிறையில் உள்ள ஆறுமுகம் இந்த விசாரணைக்காக நாளை சென்னை கொண்டு வரப்படுவார் என்று தெரிகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications