திருச்சி அருகே சாலை விபதத்தில் பாமக மாநில இளைஞரணி செயலாளர் அறிவுச்செல்வன் பலி
திருச்சி: திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் பாமக மாநில இளைஞர் அணி செயலாளர் அறிவுச்செல்வன் பலியானார்.
திருச்சி தென்னூர் அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் பாமக மாநில இளைஞர் அணி செயலாளர் அறிவுச்செல்வன்(35). அவரது மனைவி மீனாட்சி. அவர்களுக்கு அபராஜித் வர்மன், ஆளவந்தான் என்னும் 2 மகன்கள் உள்ளனர்.
பாமக சார்பில் ஜூலை 11ம் தேதி நடக்கும் மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் குறித்து பல ஊர்களுக்கு சென்று அங்குள்ள நிர்வாகிகளுடன் அவர் ஆலோசித்து வந்தார். நேற்று அவர் சென்னை சென்றுவிட்டு இரவு நேரத்தில் அங்கிருந்து காரில் திருச்சி திரும்பிக் கொண்டிருந்தார். காரை அனுமந்தபுரம் வாலாஜாநகர் பகுதியைச் சேர்ந்த சத்யசீலன் (39) ஓட்டினார்.
அந்த கார் நள்ளிரவு 12.45 மணிக்கு திருச்சியை அடுத்து உள்ள கொள்ளிடம் டோல்கேட் அருகே சென்றபோது தென்காசியில் இருந்து சென்னை நோக்கி வேகமாகச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் சில மீட்டர் தூரம் பறந்து சென்று விழுந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த அறிவுச்செல்வனும், சத்யசீலனும் படுகாயம் அடைந்தனர்.
உடனே அவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அறிவுச்செல்வன் இறந்தார். சத்யசீலனுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து சமயபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்ப்டடுள்ள அறிவுச்செல்வனின் உடலுக்கு பாமக மாநில துணை பொதுச் செயலாளர் உமாநாத், கண்ணதாசன், இளைஞரணி துணை செயலாளர் பிரின்ஸ், திமுக முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தொலைபேசி மூலம் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்குப் பிறகு அறிவுச்செல்வனின் உடல் அவரது சொந்த ஊரான அரியலூரில் அடக்கம் செய்யப்படும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications