இப்படியுமா நடக்கும்? விசா இல்லாததுக்காக 5 மாத குழந்தையை பேக்கில் பதுக்கிய பெற்றோர் கைது
ஷார்ஜா: ஷார்ஜா விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும்போது 5 மாத குழந்தையை பேக்கில் பதுக்கி பெறோர் எடுத்துச் சென்றதை எக்ஸ்ரே கருவி கண்டுபிடித்தது. இதையடுத்து அக்குழந்தையின் தாய்-தந்தை இருவரும் கைது செய்யப்பட்டனர்.

எகிப்தைச் சேர்ந்த கணவன் மற்றும் மனைவி தங்களது 5 மாத குழந்தையுடன் வெள்ளிக்கிழமைவு ஷார்ஜா விமான நிலையத்தை வந்தடைந்தனர். அவர்கள் இருவரிடமும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்குள் நுழைவதற்கான விசா இருந்தது. ஆனால் குழந்தைக்கு விசா இல்லை. இதையடுத்து இருவரும் அங்கு தடுத்து வைக்கப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமையன்றுதான் உரிய அதிகாரிகள் வருவார்கள் என்றும் அவர்கள் வந்தபிறகு முடிவு எடுக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆனால் விசாரணை அதிகாரிகள் சென்ற பிறகு அந்த தம்பதியினர் ஒரு விபரீத முடிவை எடுத்தனர். தங்களிடம் இருந்த பேக்கில் குழந்தையை வைத்து பூட்டினர். பின்னர் விமான நிலையத்தை விட்டு வெளியேற திட்டமிட்டனர். ஆனால் கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனை இருக்கும் என்று அவர்கள் நினைக்கவில்லை. அவர்களது உடைமைகளை எக்ஸ்ரே ஸ்கேனிங் செய்த போது குழந்தை போன்ற பொருள் உள்ளே இருப்பதை எக்ஸ்ரே ஸ்கேன் திரை காட்ட அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் பேக்கை திறக்கச் சொன்னர். உள்ளே குழந்தை இருந்தது கண்டுபிடித்தனர். குழந்தைக்கு விசா இல்லாததால் தாங்கள் இப்படிச் செய்ததாக அந்த பெற்றோர் கூறினர். இதை ஏற்காத அதிகாரிகள் இருவரையும் கைது செய்துள்ளனர். குழந்தையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வ்கையில் இருவரும் செயல்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications