நாளை முதல்வராக பொறுப்பேற்பு- ஆட்சிக்காலம் முழுசும் பதவியில் இருந்துவேன்: ஜெகதீஷ் ஷெட்டர் நம்பிக்கை

கர்நாடக முதல்வராக ஜெகதீஷ் ஷெட்டர் நேற்று நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் நாளை முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார்.
இந்நிலையில் ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு ஜெகதீஷ் ஷெட்டர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
சதானதந்த கவுடாவை மாற்றியிருப்பதால் ஒக்கலிகா சமூகத்தினர் கிராமந்தோறும் இதுபற்றி பிரச்சாரம் செய்யப் போவதாக ஒருசிலர் கூறிவருகின்றனர். இதுபற்றியெல்லாம் கவலைப்பட மாட்டோம். பாரதிய ஜனதா கட்சி என்பது அனைத்து சாதி, மதங்களுக்கும் பொதுவான அமைப்பு. அனைத்து தரப்பு ஆதரவும் பாஜகவுக்கு இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் சாதிய உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது.
நான் முதல்வராக பதவி வகிக்கும்காலத்தில் எவ்வித மனமாச்சரியங்களுக்கும் இடம் இருக்காது. எதியூரப்பா, அனந்தகுமார், சதானந்த கவுடா போன்ற மூத்த தலைவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி நடந்துகொள்வேன். பாரதிய ஜனதா கட்சி ஐந்து ஆண்டுகாலம் ஆட்சி செய்வதற்கு மக்கள் தீர்ப்பளித்திருக்கின்றனர். நாங்கள் நிச்சயம் ஐந்தாண்டுகாலத்தைப் பூர்த்தி செய்வோம். பாஜக அரசுப் பொறுப்பேற்ற நாள் முதலே அரசு கவிழ்ந்துவிடும் என்று எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்து பார்த்துவிட்டன. ஆனால் அது நடக்கவில்லை. நடக்காது.
என்னைப் பொறுத்தவரையில் சபாநாயகராக இருந்திருக்கிறேன்.. அமைச்சராக இருந்திருக்கிறேன்.. அதனால் முதல்வராகப் பணியாற்றுவதில் சிக்கல் இருக்காது. அனைத்து 121 எம்.எல்.ஏக்களையும் சமமாக நடத்துவேன். அனைவரும் கட்சி மேலிடத்துக்கு கட்டுப்பட்டு நடப்போம் என்றார் அவர்.
-
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications