குடியரசுத் தலைவர் தேர்தல்: பிரணாப் முகர்ஜிக்கு அதிமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரான பிரணாப் முகர்ஜிக்கு அதிமுக கூட்டணிக் கட்சியான மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலை கூட்டம் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிப்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கு ஆரோக்கியமானது இல்லை என்பதால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி மற்றும் பாஜக ஆதரவுடன் போட்டியிடும் பி.ஏ.சங்மா ஆகிய இருவரில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து உயர்நிலை குழு பரிசீலனை செய்தது.
காங்கிரஸ் கட்சியில் நேரு வகுத்த மதச்சார்பற்ற மாண்புகளை தூக்கிப்பிடிக்கும் தலைவர்களில் பிரணாப் முகர்ஜி குறிப்பிடத்தக்கவர். எனவே, காங்கிரஸ் கட்சியின் வேண்டுகோளை ஏற்று மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என உயர்நிலை குழு முடிவு செய்துள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சட்டசபை தேர்தலின்போது மனிதநேய மக்கள் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 2 இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக சங்மாவை ஆதரிக்கையில், மனிதநேய மக்கள் கட்சியோ ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரான பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications