ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டம் குறித்து கொழும்பில் பேசுகிறார் ஜெயராம் ரமேஷ்
டெல்லி: மத்திய அரசு இந்தியாவில் அமல்படுத்தி வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் குறித்து கொழும்பில் நடைபெறும் கருத்தரங்கில் பேசுகிறார் மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ். இதற்காக அவர் கொழும்பு போயுள்ளார்.
3 நாட்கள் ஜெயராம் ரமேஷ் கொழும்பில் இருப்பார். லக்ஷ்மண் கதிர்காமர் சர்வதேச உறவுகள் மற்றும் உத்திகளுக்கான கல்வி நிறுவனம் நடத்தும் கருத்தரங்கில் ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்ட அமலாக்கம் தொடர்பான தனது அனுபவங்களை ஜெய்ராம் ரமேஷ் பகிர்ந்து கொள்கிறார்.
அதைத் தொடர்ந்து அவரது முன்னிலையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே வளரும் நாடுகளுக்கு இடையிலான ஆராய்ச்சி மற்றும் தகவல் பரிமாற்ற முறை தொடர்பான உடன்படிக்கை கையெழுத்தாகவுள்ளது.
அதன் பின்னர் பண்டாரநாயக சர்வதேச கல்வி நிலையத்தில் "தெற்காசியாவில் மாறி வரும் இந்தியாவின் பங்களிப்பு' குறித்து அவர் பேசுகிறார்.
தனது பயணத்தின் ஒரு பகுதியாக ராஜபக்சே, அவரது தம்பி பசில் ராஜபக்சே, வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் ஆகியோரையும் சந்தித்துப் பேசவுள்ளார் ஜெயராம் ரமேஷ்.
சமீபத்தில் சிவசங்கர மேனன் கொழும்பு சென்று திரும்பினார். இந்த நிலையில் தற்போது ஜெயராம் ரமேஷ் போயுள்ளார். கருத்தரங்கில் பங்கேற்பதற்காக சென்றுள்ளதாக கூறப்பட்டாலும் மத்திய அரசிடமிருந்து குறிப்பாக பிரதமரிடமிருந்து ஏதாவது செய்தியுடன் அவர் ராஜபக்சேவை சந்திக்கவுள்ளாரா என்ற கேள்வி எழுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications